வால்பாறை; மாரியம்மன் கோவிலில், 28வது நாள் மண்டல பூஜையில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வால்பாறை வாழைத்தோட்டம் எம்.ஜி.ஆர்., நகர் மாரியம்மன் கோவில், மஹா கும்பாபிேஷக விழா கடந்த மாதம், 9ம் தேதி நடந்தது. விழாவை தொடர்ந்து நாள் தோறும் மண்டல பூஜை சிறப்பாக நடக்கிறது. பூஜையில் காலை, 5:00 மணிக்கு கணபதி பூஜையும், 6:00 மணிக்கு அபிேஷக, அலங்கார பூஜையும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜையில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மண்டல பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.