ஆனி செவ்வாய்; சுந்தராபுரம் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூலை 2024 11:07
கோவை சுந்தராபுரம் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 01 -ல் இருக்கும் கம்பீர விநாயகர் கோவிலில் ஆனி மாதம் நான்காவது செவ்வாய் கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் சந்தன காப்பு மற்றும் புஷ்ப அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.