100000 ருத்ராட்சத்தில் 9 அடி உயர சிவலிங்கம்; பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூலை 2024 11:07
திருப்பத்துார்; திருப்பத்துார் அருகே ஒரு லட்சம் ஐந்து முக ருத்ராட்சங்களைப் பயன்படுத்தி, 9 அடி உயர லிங்கம் அமைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. திருப்பத்துார் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த வரதன் வட்டத்தில், ஐந்து முகம் கொண்ட ஒரு லட்சம் ருத்ராட்சங்களைப் பயன்படுத்தி, 9 அடி உயரத்தில் சிவலிங்கம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் செய்யப்பட்டன. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.