சக்தி மாரியம்மன் கோவிலில் மறு காணிக்கை நிகழ்ச்சி; பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூலை 2024 06:07
மஞ்சூர்; மஞ்சூர் அருகே துானேரி கிராமத்தில் உள்ள சக்தி மாரியம்மன் கோவிலில் மறு காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
மஞ்சூர் அருகே துானேரி கிராமத்தில் நுாற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் ஆண்டு தோறும் மார்ச் மாதம் மாரியம்மன் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டு திருவிழா அங்குள்ள சக்தி மாரியம்மன் கோவிலில் கடந்த மார்ச் மாதம் சிறப்பாக நடந்து முடிந்தது. அதன் பின், மறு காணிக்கை என்ற பூஜை ஜூலை மாதம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இன்று சக்தி மாரியம்மன் கோவிலில் காலை, 9:00 மணிக்கு கணபதி பூஜை, 10:30 மணியளவில் நாராயண மூர்த்தி கோவிலிலிருந்து தங்க அங்கி, ஊர் தலைவர் ராமன் கவுடர், கோவில் பூசாரி போஜராஜ் தலைமையில், பக்தர்கள் புடைசூழ எடுத்து செல்லப்பட்டு சக்தி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பஜனை நிகழ்ச்சியை தொடர்ந்து நடந்த காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.