பதிவு செய்த நாள்
09
ஜூலை
2024
06:07
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள சொக்கலிங்கேஸ்வரர் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
இக்கோவிலில் ராஜகோபுரம், மூலவர், பரிவார மூர்த்திகள், கோபுரங்கள் ஆகியவை புனரமைக்கப்பட்டு வரும், 12ம் தேதி வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி, நேற்று காலை, 7.00 மணிக்கு மகாலட்சுமி ஹோமமும், மாலை, 6.00 மணிக்கு சாந்தி ஹோமமும், மூர்த்தி ஹோமமும் நடந்தன. இன்று மாலை, 5.00 மணிக்கு முதல் கால யாக சாலை பூஜை நடந்தது. நாளை காலை, 9.00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும், மாலை, 6.00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜைகளும், வியாழக்கிழமை காலை, 9.00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகளும், மாலை, 5.00 மணிக்கு ஐந்தாம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெற உள்ளன. வரும் வெள்ளிக்கிழமை,12ம் தேதி அதிகாலை, 3.00 மணிக்கு ஆறாம் கால யாகசால பூஜைகளும், தொடர்ந்து அதிகாலை, 5.30 மணி முதல், 6:30 மணிக்குள் கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது. விழாவை ஒட்டி அன்னதானமும், மாலை, 5.00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் இரவு, 7.00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.