பதிவு செய்த நாள்
10
ஜூலை
2024
11:07
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவிலில், கோர்ட் உத்தரவுபடி பக்தர்கள் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்தனர்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தரிசன விழா கடந்த 3ம் தேதி துவங்கியது. கடந்த ஆண்டு உற்சவத்தின் போது, கனகசபை மீதேறி தரிசனம் செய்ய தீட்சிதர்கள் அனுமதிக்காமல் தடை செய்தனர். அதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ராதாகிருஷ்ணன் என்பவர் தொடுத்த வழக்கில், கனகசபையில் ஏறி, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய உத்தரவு பிரப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் பக்தர்கள் கனகசபை மீதேரி தரிசனம் செய்தனர். இந்நிலையில். இந்த ஆண்டு விழா துவங்கிய நிலையில், இன்று (10ம் தேதி) முதல் 11, 12, 13 ஆகிய 4 நாட்கள் கனகசபையில் தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்படும். பக்தர்கள், ஒத்துழைக்க வேண்டும் என தீட்சிதர்கள் கூறினர். மேலும், காவல் துறையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என, தீட்சிதர்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, சம்பந்தமூர்த்தி என்பவர் கடந்த வாரம் சென்னை ஐகோர்ட்டில் தொடுத்த வழக்கில், கனகசபை மீதேறி தரிசனம் செய்யும் நடைமுறை தொடர வேண்டும் என, நேற்று முன்தினம் கோர்ட் உத்தரவிட்டது. அதையடுத்து, இன்று காலை நடராஜர் கோவிலில், காலை 8:30 மணி முதல், திருச்சோபுரநாதர் கோவில் செயல் அலுவலர் மகேஸ்வரன், விருத்தகிரிஸ்வரர் கோவில் செயல் அலுவலர் மாலா, ஆகியோர் தலைமையில், போலீசார் பாதுதுகாப்புடன், தீட்சிதர்கள் அனுமதியுடன், கனகசபையின் மீது ஏறி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.