காளஹஸ்தி திரௌபதி சமேத தர்மராஜ சுவாமி கோவிலில் சுவரொட்டிகள் வெளியீடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூலை 2024 04:07
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு துணை கோயிலான திரௌபதி சமேத தர்மராஜ சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இம்மாதம் 12- ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த திருவிழாவிற்கான சுவரொட்டிகள் வெளியீட்டு விழா இன்று ஸ்ரீகாளஹஸ்தி சிவன் வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சந்நிதி அருகில் கோயில் செயல் அலுவலர் எஸ்.வி.எஸ்.எஸ்.மூர்த்தி தலைமையில் திரௌபதி சமேத தர்மராஜா சுவாமி வருடாந்திர திருவிழாவிற்கான சுவரொட்டிகளை ஸ்ரீ காளஹஸ்தி எம்.எல்.ஏ. பொஜ்ஜல.சுதீர ரெட்டி முக்கிய விருந்தினராக கலந்து கொண்டு சுவர்ரொட்டிகளை வெளியிட்டார். தொடர்ந்து எம்.எல்.ஏ. பொஜ்ஜல. சுதிர் ரெட்டி பேசியதாவது; சிவன் கோயில் துணை கோயிலான திரௌபதி சமேத தர்மராஜ ஸ்வாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவை இந்த ஆண்டு மிக சிறப்பாக நடத்தும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்யும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும், தீ மிதி விழாவை அமைதியான முறையில் எந்த ஒரு அசம்பாவிதச் சம்பவங்களோ, பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு நடக்காமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுச் செய்ய உள்ளதாகவும், மேலும் அமைதியான சூழலில் சாமி ஊர்வலம் நடத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் , அதே போல் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் வருமானத்தை அதிகரிக்க நன்கொடையாளர்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும், நன்கொடையாளர்களுக்கு (தங்க கார்ட் அனுமதி) இலவச ராகு கேது பூஜையில் ஈடுபடவும் மற்றும் கோயிலில் சிறப்பு தரிசன ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார்.