பதிவு செய்த நாள்
11
ஜூலை
2024
05:07
மைசூரு; கன்னட ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, சாமுண்டி மலையின் சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, 25,000 மைசூரு பாக் பிரசாதம் தயாராக உள்ளது.
கன்னட ஆடி மாதம் பிறந்துள்ளது. நாளை முதல் வெள்ளிக்கிழமைகளில் மைசூரின், சாமுண்டி மலையின் சாமுண்டீஸ்வரியை தரிசிக்க, பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். கோவில் முழுதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. ஜூலை 12, 19, 26, ஆகஸ்ட் 2ல், கன்னட ஆடி வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடக்கும். பக்தர்களுக்கு வினியோகிக்க, 25,000 மைசூரு பாக் பிரசாதம் தயாராக உள்ளது. இவற்றை, 40 சமையல் ஊழியர்கள் தயாரித்தனர். மைசூரு பாக்குக்கு 500 கிலோ சர்க்கரை, 30 லிட்டர் எண்ணெய், 200 கிலோ கடலை மாவு, 100 கிலோ நெய், 3 கிலோ ஏலக்காய் பயன்படுத்தப்பட்டது. ஆண்டுதோறும் முதல் ஆடி வெள்ளியில், சாமுண்டீஸ்வரி சேவா சமிதி சார்பில் இனிப்பு பிரசாதம் வழங்குவது வழக்கம். அதே போன்று இம்முறை, மைசூரு பாக் தயாரித்துள்ளது. இன்று கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.