Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பாதிரிப்புலியூர் ... தஞ்சை பெரிய கோயிலில் வெண்ணை காப்பு அலங்காரத்தில் மகா வாராஹி அம்மன் அருள்பாலிப்பு தஞ்சை பெரிய கோயிலில் வெண்ணை காப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித்திருமஞ்சனம்; நடராஜர் மகா தரிசனம் கண்டு பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித்திருமஞ்சனம்; நடராஜர் மகா தரிசனம் கண்டு பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2024
05:07

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித்திருமஞ்சனம் மகோற்சவத்தையொட்டி நடனமாடி வந்த நடராஜர் சுவாமி மகா தரிசனத்தை பல்லாயிரகனக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.


சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன உற்சவ விழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜர் சுவாமி  தேரோட்டம் நடந்தது. தேரோட்டம் மாலை 6 மணிக்கு கீழ சன்னதியில் நிலைக்கு வந்தது. 8 மணிக்கு சுவாமி தேரில் இருந்து புறப்பாடு செய்து ஆயிரங்கால் மண்டபம் முகப்பில் எழுந்தருளினார். இதில் ஆயிரகனக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இரவு 9 மணிக்கு சுவாமிக்கு ஏகதின லட்சார்ச்சனை நடந்தது. அதிகாலை 4 மணிக்கு ஆயிரங்கால் மண்டபம் ராஜசபையில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சுவாமிக்கு மகா அபிஷேகம், தீபாராதனைகள்  நடந்தது. 


பின்னர் சுவாமி, அம்பாள் ஆயிரங்கால் உள்மண்டபத்தில் எழுந்தருளி ஊஞ்சல் திருவாபரண அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியருளினார். காலை 11 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜைகள் நடந்தது. 12 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு செய்து 1.15 மணிக்கு ஆயிரங்கால் மண்டபம் முன்பு எழுந்தருளினார். மதியம் 2.10 மணிக்கு மேளதாலங்களுடன், தேவாராம் பன்னிரு திருமுறை பாட, சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜர் முன் மண்டபத்தில் ஆனந்த நடனமாடி வரும் ஆனித்திருமஞ்சனம் மகா தரிசனம் கண்கொள்ளாக் காட்சி நடந்தது. இதில் லட்கனக்கான பக்தர்கள்  “சிரசுக்கு மேல் கை கூப்பி வணங்கி கைளை தட்டி ஓசைகள் எழுப்பியும், தில்லை அம்பலத்தானே, ஆடல் வல்லானே” என கோஷம் எழுப்பி பக்தர்களும் ஆனந்த நடனமாடி சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் நடராஜர் சுவாமி 21 படி வாசல் வழியாக சித்சபை பிரவேசம் செய்தார். சித்சபை முன்பு தீட்சிதர்கள், சுவாமியை வரவேற்று சிறப்பு வழிபாடுகள் செய்தனர். நடராஜர் சுவாமி தரிசனம் உற்சவத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரகனக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
கங்கா ஸ்நானம் செய்ய நல்ல நேரம்: அதிகாலை 5.00 - 5.30மணி.அதிகாலை கங்காஸ்நானம், படபடவென வெடித்துச் சிதறும் ... மேலும்
 
temple news
சென்னை; ‘‘சனாதன தர்மத்திலும் கடவுள் ஒருவர்தான்,’’ என, சிருங்கேரி சன்னிதானம் ஸ்ரீவிதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
இரண்டு பேருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்பவர் (பிரச்னைக்கு தீர்வு சொல்பவர்) தராசு போல நடுநிலையாளராக ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; பாகம் பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண விழாவை ஒட்டி சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar