பதிவு செய்த நாள்
15
ஜூலை
2024
01:07
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம் : நினைத்ததை நடத்தி முடிக்கும் ஆற்றலும், அதிர்ஷ்ட நிலையையும் வாழ்க்கையாக கொண்டு பிரகாசித்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் அதிர்ஷ்ட மாதமாக இருக்கப் போகிறது. உங்கள் நட்சத்திர நாதன் முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இதுவரையில் தடைப்பட்டிருந்த வேலைகள் எல்லாம் இனி விறு விறுவென நடந்தேறும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். அலுவலகத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவிற்கு வரும். பணவரவு அதிகரிக்கும். ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் வக்ரமடைந்திருப்பதால் தொழில், உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். மெமோ, சஸ்பெண்ட் என்ற நிலை மாறும். உங்கள் முயற்சியில் வெற்றி உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் பொருளாதார நிலை உயரும் வெளிநாட்டு முயற்சிகள் ஆதாயத்தை ஏற்படுத்தும். பணியாளர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ராசிக்குள் சஞ்சரிக்கும் குருவால் இடமாற்றம், பதவி உயர்வும் சிலருக்கு ஏற்படும். திருமண வயதினருக்கு வரன்வரும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். பெண்களுக்கு கணவரின் ஆதரவுடன் தந்தை வழியாலும் ஆதாயம் உண்டாகும். ஒரு சிலர் புதிய இடம் வாங்குவீர். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வரும். அரசியல்வாதிகள் நிலை உயரும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 19. ஆக. 15.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 24, 28. ஆக. 1, 6, 10.
பரிகாரம்: குருபகவானை வழிபட குறைகள் தீரும். நன்மை உண்டாகும்.
ரோகிணி : தெளிவாகவும், திட்டமிட்டும் செயல்பட்டு வாழ்வில் முன்னேற்றத்தையும், யோகத்தையும் அடைந்து வரும் உங்களுக்கு பிறக்கும் ஆடி மாதம் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும் மாதமாக இருக்கப் போகிறது. உத்தியோகத்தில் நீங்கள் சந்தித்து வந்த பிரச்சினைகள், சோதனைகள் எல்லாம் சூரியனைக் கண்ட பனிபோல் விலகப் போகிறது. தடைப்பட்ட பதவி உயர்வு, இடமாற்றம் இப்போது கிடைக்கும். வேலை பளுவால் அவதிப்பட்டு வந்த நிலை இனி மாறும். தொழில் வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். லாபம் அதிகரிக்கும். ஜென்ம குருவால் அலைச்சல் அதிகரித்தாலும் உங்கள் நிலை உயரும். செல்வமும், செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்காலத்திற்குரிய அடிப்படைகள் அமையும். திருமணம், குழந்தை பாக்கியம், சொத்து என்று சந்தோஷம் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவிற்கு வரும். உங்கள் மன நிலையைப் புரிந்து கொண்டு வாழ்க்கைத் துணை செயல்படுவார். பிரிந்து சென்ற நண்பர்கள் தேடிவருவர். ஆலய வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் பல வழியிலும் வருவாய் வரும். வெளிநாட்டு முயற்சி வெற்றியாகும். பெண்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பணியில் இருந்த சங்கடங்கள் விலகும். ஒரு சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். கலைஞர்கள் கனவு நனவாகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். விவசாயிகளுக்கு விளைச்சல் அமோகமாகும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 19, 20. ஆக. 16.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 20, 24, 29. ஆக. 2, 6, 11, 15.
பரிகாரம்: கற்பக விநாயகரை வழிபட முயற்சிகள் வெற்றியாகும்.
மிருகசீரிடம் 1, 2 ம் பாதம் ; தைரியமும் துணிச்சலும் கொண்டு மற்றவரால் சாதிக்க முடியாதவற்றை சாதித்து செல்வாக்குடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் நன்மைகள் கூடி வரும் மாதமாகும். லாப ராகு, சகாய சூரியன், ஜென்ம குருவின் 5,7,9 ம் பார்வைகள் உங்கள் நிலையை உயர்த்தும். செல்வாக்கை அதிகரிக்கும். பணவரவை உண்டாக்கும். இழுபறியாக இருந்த முயற்சிகளில் வெற்றியை ஏற்படுத்தும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். முடியாதென பிறர் விட்டுச்சென்ற வேலைகளையும் முடித்துக் காட்டுவீர்கள். பணியில் உங்கள் மீது ஏற்பட்ட பழிகள் நிரூபிக்க முடியாமல் போகும். இழுபறியாக இருந்த விசாரணை முடிவிற்கு வரும். ட்ரான்ஸ்பர், சஸ்பென்ஷன் உத்தரவுகள் மாறும். செய்துவரும் தொழிலில் இருந்த தடைகள் விலகும். வியாபாரம் முன்னேற்றமடையும். கூட்டுத்தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி விலகி லாபம் தோன்றும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். பெரியோரின் ஆதரவு நன்மைதரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். திருமண வயதினருக்கு பொருத்தமான வரன் வரும். கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் உண்டாகும். குழந்தைக்காக ஏங்கியவர்களின் ஆசை பூர்த்தியாகும். பூர்வீக சொத்தில் இருந்த சிக்கல் விலகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 20. ஆக.16.
அதிர்ஷட நாள்: ஜூலை 18,24,27. ஆக. 6,9,15.
பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வணங்கிட வாழ்க்கை வளமாகும்.