பதிவு செய்த நாள்
15
ஜூலை
2024
01:07
அசுவினி; அறிவாற்றலும், செயல்திறனும், இறையருளும் கொண்டு, நடப்பவை யாவும் அவன் செயலென எண்ணி வாழ்ந்துவரும் உங்களுக்கு பிறக்கும் ஆடி மாதத்தில் உங்கள் நட்சத்திரநாதனின் சஞ்சார நிலையால் ஆரோக்கியம் சீராகும். நினைத்ததை சாதிக்கும் நிலை உண்டாகும். தொழில் வியாபாரம் விருத்தியாகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். போட்டியாளர்களால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். வழக்கு சாதகமாகும். இதுவரையில் இருந்த பிரச்சினைகள் விலக ஆரம்பிக்கும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் வக்ரமடைந்திருப்பதால் உங்களுடைய நேரடிப்பார்வை தேவைப்படும். பணியாளர்களை அனுசரித்துச் செல்வதால் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். மேலைநாட்டு தொடர்புகள் ஆதாயம் தரும். தன ஸ்தான குருவால் வருமானம் அதிகரிக்கும். நினைத்த காரியங்களை நினைத்தபடி செய்து லாபம் காண்பீர். குடும்பத்தில் அமைதி உண்டாகும். தொழில் விருத்தியாகும். வேலைக்காக முயற்சித்து வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். எண்ணம் நிறைவேறும். மறைந்திருந்த உங்கள் செல்வாக்கு வெளிப்படும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு, பதவி வரும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். விவசாயிகள் எதிர்பார்ப்பு நிறைவேறும். விற்பனையில் லாபநிலை உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். விரும்பிய வாகனம் வாங்க முடியும். பெண்களுக்கு குடும்பத்தில் மதிப்பு அதிகரிக்கும். பொன் பொருள் சேரும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 17, ஆக. 13.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 18,25,27. ஆக. 7,9,16.
பரிகாரம்: நவகிரகத்தில் உள்ள கேது பகவானை வழிபட விருப்பம் நிறைவேறும்.
பரணி; மனதில் துணிவும், வாழ்வில் அதிர்ஷ்டமும், சமூகத்தில் செல்வாக்கும் கொண்டு நினைப்பதை சாதிக்கும் வலிமை கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆடி மாதம் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும் மாதமாக இருக்கும். உங்கள் நட்சத்திர நாதன் சுக்கிரன் மாதம் முழுவதும் உங்களைப் பாதுகாப்பார். உறவுகளிடம் செல்வாக்கு அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். தன ஸ்தானத்தில் குரு செவ்வாய் இணைவு பெறுவதால் குரு மங்கள யோகம் உண்டாகும். செயல்கள் யாவும் ஆதாயமாகும். இதுவரையில் உங்களுக்கிருந்த பிரச்சினைகள் விலகும். உங்கள் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் மதிப்பு உண்டாகும். கணவருடன் ஏற்பட்ட மனஸ்தாபம் விலகும். வேலையில் இருந்த பிரச்சினை முடிவிற்கு வரும். அரசியல்வாதிகளுக்கு மேலிட செல்வாக்கு உண்டாகும். எதிர்பார்த்த பொறுப்பும் ஒரு சிலருக்கு கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றமும் எதிர்பார்த்த லாபமும் உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் விலகும். இழுபறியாக இருந்த விவகாரத்தில் வெற்றி ஏற்படும். புதிய பொன் பொருள் சேரும். பண வரவு திருப்தி தரும். மேலைநாட்டு முயற்சிகள் சாதகமாகும். அந்நியரால் ஏற்பட்ட சிக்கல் தீரும். அரசு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிவோருக்கும் வேலைப்பார்க்கும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். பணவரவில் இருந்த தடைகள் விலகும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சந்திராஷ்டமம்: ஜூலை 17, 18. ஆக. 14.
அதிஷ்ட நாள்: ஜூலை 24, 27. ஆக. 6, 9, 15.
பரிகாரம்: துர்கையை வழிபட எதிர்ப்பு விலகும். வழக்கு சாதகமாகும்.
கார்த்திகை 1 ம் பாதம்:; மன வலிமையும், துணிவும் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றியடையும் யோகமும் கொண்டு பிறந்த நீங்கள் எங்கு இருந்தாலும் அங்கு தனித்துவத்துடன் பிரகாசிப்பவராக இருப்பீர்கள். பிறக்கும் ஆடி மாதம் முழுவதும் உங்கள் நட்சத்திரநாதன் சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வேலை பளு அதிகரிக்கும். உங்களைக்கண்டு பயந்திருந்தவர்கள் கை ஓங்கும் என்றாலும் தன ஸ்தானத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் குருவுடன் இணைவதால் எதிர்ப்புகளை இல்லாமல் செய்வீர்கள். நீங்கள் நினைத்ததை எல்லாம் நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள், சங்கடங்கள் விலகும். அரசியல்வாதிகள் தலைமையை அனுசரித்துச் செல்வதால் பொறுப்பும் பதவியும் நீடிக்கும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு வேலைக்குரிய அனுமதி கடிதம் வரும். சனியின் பார்வைகளால் பல்வேறு சங்கடங்களை நீங்கள் சந்தித்துக்கொண்டிருந்த நிலையில் ஆடி மாதம் முழுவதும் சனி வக்ரகதி அடைவதால் உடல்நிலை முன்னேற்றம் காணும். உங்கள் செல்வாக்கும் வெளிப்படும். 6,8,10 ம் இடங்களுக்கு குரு பகவானின் பார்வை உண்டாவதால் துணிச்சலாகவும் தைரியமாகவும் செயல்படுவீர். வழக்கு விவகாரம் சாதகமாகும். தொழிலில் இருந்த நெருக்கடிகள் விலகி முன்னேற்றம் ஏற்படும் வருமானம் அதிகரிக்கும். வேலைக்காக முயற்சித்தவர்களின் கனவு நனவாகும். வேலைக்குரிய தகவல் வீடுதேடி வரும். பெண்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் இனக்கம் உண்டாகும். பணியாளர்களுக்கு உழைப்பு அதிகரித்தாலும் அதற்கேற்ற வருமானம் வரும். வெளிநாட்டிற்கு செல்வதற்காக முயற்சித்தவர்கள் விருப்பம் நிறைவேறும். விவசாயத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்
சந்திராஷ்டமம்: ஜூலை 18. ஆக. 15.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 19, 27, 28. ஆக. 1, 9, 10, 16.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை காலையில் சூரியனை வழிபட சுபிட்சம் உண்டாகும்.