கோபால்பட்டி; கோபால்பட்டி அருகே மருநூத்து மாரியம்மன், காளியம்மன், பகவதி அம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி ஜூலை.12 கிராம தெய்வங்களுக்கு பழம் வைத்தல் மற்றும் அன்று இரவு சாமி கரகம் ஜோடிக்க புறப்படுதலுடன் திருவிழா தொடங்கியது. மறுநாள் அதிகாலை மேளதாளம் முழங்க சாமி கோயில் வந்தடைதல், அதனைத் தொடர்ந்து மாவிளக்கு, முளைப்பாரி, அக்கினி சட்டி, பொங்கல் வைத்து கிடாய் வெட்டுதல் உள்ளிட்ட நேர்த்தி கடன்களை பக்தர்கள் அம்மனுக்கு செலுத்தினர். தொடர்ந்த இரவு கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று மாலை அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன், பக்தர்கள் ஆரவாரத்துடன் அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.