கோபால்பட்டி; கோபால்பட்டி அருகே கோம்பைப்பட்டி காளியம்மன், பகவதி அம்மன் கோயில் திருவிழாவில் தீச்சட்டி மற்றும் சாமி ஊர்வலம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி முன்னதாக ஜூன்.28 சாமி சிலை செய்ய கிராம மக்கள் மஞ்சள் ஆடை அணிந்து பக்தி பரவசத்துடன் பிடி மண் எடுத்து வந்து காப்பு கட்டி 15 நாள் விரதத்தை தொடங்கினர். ஜூலை12ல் சுவாமி நகைப்பெட்டியுடன் அம்மன்கரகம் ஜோடி கோயில் வந்தடைந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் மாவிளக்கு, முளைப்பாரி, தீச்சட்டி, கிடாய் வெட்டி பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை பக்தர்கள் அம்மனுக்கு செலுத்தினர். நேற்று மஞ்சள் மாலை நீராட்டத்துடன் மேளதாளம் முழங்க அம்மன் பூஞ்சோலை செல்வதுடன் திருவிழா நிறைவு பெறுகின்றது.