வாராஹி கோயில்களில் ஆஷாட நவராத்திரி விழா தீச்சட்டி எடுத்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூலை 2024 10:07
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராஹி அம்மன் கோயில்களில் ஆஷாட நவராத்திரி விழாவில் தீச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வர சித்தி வாராஹி அம்மன் கோயிலில் ஜூலை.5 கணபதி ஹோமம், பக்தர்கள் காப்புக் கட்டி 10 நாள் விரதத்தை தொடங்கினர். தொடர்ந்து தினமும் அன்னதானம், இரவு கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பத்து நாட்கள் நடக்கும் இவ்விழாவில் மகா வாராஹி ஹோமம், லகு வாராஹி ஹோமம், அஸ்வாரூடா வாராஹி ஹோமம், சிமாருட வாராஹி ஹோமம், ஜூலை 10 ல் பஞ் சமி திதி அன்று ஊஞ்சல் உற்ஸவம், விளக்கு பூஜை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று பக்தர்கள் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.ஏற்பாடுகளை வரசித்தி வாராஹி அம்மன் கோயில் பீடாதிபதி சஞ்சீவி சாமிகள், அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.