ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் அருகே பாம்பனில் சந்தனமாரியம்மன் கோயில் முளைக்கொட்டு விழா யொட்டி பக்தர்கள் முளைபாரியை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். பாம்பன் கிழக்கு வலசை தெருவில் உள்ள ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோயிலில் ஜூலை 9ல் முளைக்கொட்டு விழாவுக்கு நவதானியங்கள் பரப்பி பகத்ரகள் வளர்த்தனர். நேற்று முன்தினம் முளைக்கட்டு விழா யொட்டி அம்மனுக்கு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. பின் நேற்று பகதர்கள் கோயிலில் இருந்து முளைப்பாரியை சுமந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர். பின் கபி தீர்த்த குளத்தில் முளைப்பாரியை கொட்டி கரைத்தனர். ஏற்பாடுகளை விழா குழு தலைவர் பாலன், முருகேசன், அனுமந்தன், முனீஸ்வரன், ராஜசேகர், முனியசாமி, மாரி செய்திருந்தனர்.