ஆடி வெள்ளி; அம்மன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்.. காத்திருந்து தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூலை 2024 11:07
கோவை; ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு , அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கோவை ரத்தினபுரி ஸ்ரீ கருமாரியம்மன் கோவிலில் வளையல் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காலை முதல் பெண் பக்தர்கள் அம்மனுக்கு நெய் விளக்கு ஏற்றி , வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல், ஆடி வெள்ளிக்கிழமையை ஒட்டி கோவை ராம் நகர் ராஜாஜி வீதியில் உள்ள ஸ்ரீ விளையாட்டு மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவத்தில் அருள் பாலித்த அம்மனை ஆட்டி பக்தர்கள் மகிழ்ந்தனர். கோவை தயிர் இட்டேரி பகுதியில் உள்ள ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவிலில் சந்தன காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வழக்கத்தை விட கூட்டம் அலைமோதியது. பெண்கள் மஞ்சள் புடவையுடன் வேண்டுதல் செய்தனர்.