ஆடி வெள்ளி; 300 கிலோ மஞ்சள் அரைத்து பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூலை 2024 10:07
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில்,ஆடிவெள்ளியை முன்னிட்டு இன்று மஞ்சள் அபிஷேகம் செய்வதற்கு நேற்று ஏராளமான பெண் பக்தர்கள் பச்சை மஞ்சள் அரைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில்,ஆண்டுதோறும் ஆடி செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும். ஆடி வெள்ளியன்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதோடு கூழ் ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்துவர். நேற்று மாலை கோயில் வளாகத்தில் 51 அம்மிக்கல் ஏற்பாடு செய்யப்பட்டன. மாலையில் மீனாட்சிபுரம், அண்ணா நகர், முத்துப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள் அபிஷேகத்திற்கு தேவையான 300 கிலோ மஞ்சளை அரைக்கத் தொடங்கினர். இன்று அம்மனுக்கு சிறப்பு மஞ்சள் அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.