ஆடி முதல் வெள்ளி; புவனேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூலை 2024 02:07
கோவை; சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1 ல் உள்ள கம்பீர விநாயகர் கோவிலில் ஆடி முதல் வெள்ளிகிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் புவனேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. இதில் காசி விசாலாட்சி திருக்கோளத்தில் புவனேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.