சிவகாசி விஸ்வநாத சுவாமி கோயில் ஆடித்தபசு விழாவில் சட்ட தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூலை 2024 04:07
சிவகாசி; சிவகாசி விஸ்வநாத சுவாமி கோயிலில் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு சட்ட தேரோட்டம் நடந்தது.
சிவகாசி விஸ்வநாத சுவாமி கோயில் ஆடித்தபசு திருவிழா ஜூலை 11 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாதாரதனைகள் நடந்தது. சுவாமி ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் இரவு சுவாமி, அம்பாளுடன் ரிஷப, காமதேனு, சிம்ம, யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வருவார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சட்ட தேரோட்டம் இன்று நடந்தது ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தொடர்ந்து ஜூலை 21 ல் தபசு காட்சி நடைபெறும்.