ஆடி வெள்ளி; கீழக்கரை அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூலை 2024 04:07
கீழக்கரை; ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இன்று காலை 9:00 மணிக்கு கீழக்கரை தட்டான் தோப்பு தெரு, நாராயணசுவாமி கோயிலில் உள்ள பத்திரகாளி அம்மனுக்கு ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நிறைவேற்றப்பட்டது. ஏராளமான பெண்கள் நெய் தீபம் ஏற்றினர். பக்தர்களுக்கு கூழ் வார்க்கப்பட்டது.
* வண்ணாங்குண்டு அருகே பெரியபட்டினம் அழகு நாயகி அம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் அலங்கார தீப ஆராதனைகள் நடந்தது. பெண்கள் பொங்கலிட்டனர். பனையோலை பட்டையில் பக்தர்களுக்கு கூழ்வார்க்கப்பட்டு வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஆடி வெள்ளியை முன்னிட்டு களிமண்குண்டு காந்தாரி அம்மன் கோயிலில் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் விழா குழுவினர் செய்திருந்தனர்.