பதிவு செய்த நாள்
20
ஜூலை
2024
11:07
பெங்களூரு; ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான நேற்று, அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டன. அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் அலைமோதினர். ஸ்ரீநந்தலாலா அறக்கட்டளை சார்பில் ஜே.பி., நகர், ஆனந்தமாயி ஆசிரமத்தில் முதல் ஆடி வெள்ளியில் 108 விளக்கு பூஜை நடத்தப்பட்டது. இதில் பெண்கள் பக்தி பரவசத்துடன் பூஜை செய்தனர்.
இதேபோல், சிவாஜி நகர், ஸ்ரீராமுலா சன்னிதி தெரு, அங்காள பரமேஸ்வரி கோவிலில் 36 புடவைகளுடன் அங்காள பரமேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தாதர்.
கே.பி.அக்ரஹாரா, வேம்பு அம்மன், வாராஹி அம்மன், ஸ்ரீ காளியம்மா ஆலயம் டிரஸ்ட் – ஓ.ஆர்.சி., ரோடு, ஆஸ்டின் டவுன், முன்ஷிகள்ளி, பெரியபாளையத்து அம்மன் கோயிலில் பால் குடம் ஊர்வலம், ஸ்ரீசவுடேஸ்வரி அம்மன் கோவில், ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில் – தயானந்த நகர், ஸ்ரீராமபுரம், ஸ்ரீ அன்னபூர்னேஸ்வரி கோவில் – ராமசந்திரபுரம், ஸ்ரீராமபுரம், ஸ்ரீகங்கையம்மன் கோவில் – பாஷ்யம் நகர், ஸ்ரீராமபுரம், ஸ்ரீசர்க்கிள் மாரியம்மன் கோவில் – 6வது முக்கிய வீதி, ஸ்ரீராமபுரம், ஸ்ரீமாரியம்மன் கோவில் – 2வது முக்கிய வீதி, ஹனுமந்தபுரம், ஸ்ரீராமபுரம். ஓம் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் – கே.பி.அக்ரஹாரம், வெள்ளி கவச அலங்காரத்தில் கென்னடிஸ், தங்கவயல் முத்து மாரியம்மன், வெண்ணெய் அலங்காரத்தில் ஸ்ரீ கங்கம்மா – ஸ்ரீ கங்கம்மா தேவி கோவில், காக்ஸ்டவுன், எலுமிச்சை அலங்காரத்தில் தண்டு மாரியம்மன் சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர், நாகதேவி அலங்காரத்தில் முத்து மாரியம்மன் – ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில், எஸ்.கே., கார்டன் என பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.