காளஹஸ்தி சிவன் கோயிலில் டெல்லி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ராகு கேது பூஜை செய்து வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூலை 2024 05:07
ஸ்ரீகாளஹஸ்தி; ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி ஹிமா கோய்லி ராகு கேது பூஜை செய்து சுவாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு டெல்லி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹிமா கோஹ்லி தனது குடும்ப உறுப்பினர்களுடன் சாமி தரிசனம் செய்ய வந்தார். அவரை தேவஸ்தான செயல் அதிகாரி மூர்த்தி சிறப்பு தரிசன ஏற்பாடுகளை செய்தனர். கோயிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரையும் ஞான பிரசுனாம்பிகையை தரிசனம் செய்தவருக்கு கோயில் வளாகத்தில் உள்ள தஷிணாமூர்த்தி சன்னதி அருகில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு சாமி திருவுருவப் படத்துடன் கோயில் தீர்த்தப் பிரசாதங்களை வழங்கப்பட்டன. மேலும் வேதப் பண்டிதர்கள் வேத மந்திரங்களுடன் பிரத்தியேக ஆசிர்வாதம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் தேவஸ்தான உதவி ஆணையர் மல்லிகார்ஜுன பிரசாத், அதிகாரிகள் கிருஷ்ணா ரெட்டி, நாகபூஷணம் யாதவ், கோவில் ஆய்வாளர் ஹரி யாதவ், 12வது கூடுதல் மாவட்ட நீதிபதி ஸ்ரீனிவாஸ் நாயக், முதன்மை சிவில் நீதிபதி தர்மாராவ் மற்றும் கோயில் அலுவலர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.