மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூலை 2024 10:07
மானாமதுரை; மானாமதுரை தயாபுரம் உடைகுளம் முத்துமாரியம்மன் கோயிலில் வருடம் தோறும் ஆடி மாதம் வரும் பவுர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம்.நேற்று ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு பால், பன்னீர்,சந்தனம்,குங்குமம்,திரவியம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து 150 க்கும் மேற்பட்ட மகளிர்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது.திருவிளக்கு பூஜையில் தயாபுரம்,உடைகுளம், எம்.ஜி.ஆர்., நகர், சிப்காட் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி சுப்பிரமணியன் செய்திருந்தார்.