பதிவு செய்த நாள்
22
ஜூலை
2024
10:07
அவிநாசி; ஆடி தபசு நிகழ்ச்சி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
கயிலாயத்தில் சிவன் அக்னி தாண்டவம் ஆடி கொண்டிருக்கிறார். சிவன் ஆடிய அக்னி தாண்டவத்தின் தீ ஜுவாலை பொறுக்க முடியாமல்,பார்வதி அவரிடம் மன்றாடுகிறார். அப்போது சிவன் திருப்புக்கொளியூர் எனும் ஊரில் சென்று தவமிருங்கள் என கூறுகிறார். அதற்காக, பார்வதி தவம் இருக்க வருகை புரியும் போது, வான்வெளியில் எவ்விதமான தவசுவின் தொல்லைகள் இருக்க கூடாது என ஆகாச ராயராக முருக பெருமான் உடன் வந்து காவலாக இருக்கிறார். இதனையடுத்து,பார்வதி மா மரத்தில் அமர்ந்து சிவனை நினைத்து தவம் புரிகிறார். சுமார் 2000 வருடங்கள் ஆனதும் மா மரம் பாதிரி மரமாக மாறி விடுகின்றது. பாதிரி மரம் இயற்கையாக பூ பூக்கும்.ஆனால் காய்காது. இந்நிலையில்,சிவன்,கங்கை மற்றும் கால பைரவரும் ஒன்றாக இணைந்து காட்சி தருகின்றனர். பார்வதி தேவியின் தவத்திற்காக, சிவன் அளித்த வரத்தின் மகிமையாக, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள மூலவர் லிங்கேஸ்வரரின் வலது பாகமாக கருணாம்பிகை அம்மன் அருள் புரிகிறார். இதனையே ஆடித் தபசு விழாவாக கொண்டாடப்படுகின்றது. மேலும், உத்திராடம் நட்சத்திரம்,பௌர்ணமி இணைந்து வரும் நாளில், 1008 ருத்ராட்சம், 108 பவளம் மற்றும் 308 ஸ்படிகம் கொண்ட லிங்க திருமேனியாக ரிஷப வாகனத்தில், கோவில் வளாகத்தில் பட்டி சுத்தி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.