காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி - சென்னை சாலையில் உள்ள சாய்பாபா கோவிலில் நேற்று ( ஞாயிற்றுக்கிழமை) குரு பௌர்ணமி விழா கோலாகலமாக நடைபெற்றது, முன்னதாக சாய் பாபா கோயில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, காலை ஆரத்தியில் தொடங்கி 108 அஷ்டோத்தர சத கலச அபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் மிகுந்த பக்தியுடன் இறைவனை தரிசித்த நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து பாபாவை தரிசித்து, கோவில் பூசாரிகளின் பாபாவின் பக்தி பாடல்கள் முழக்கங்களுக்கு மத்தியில் சிறப்பு பூஜைகள் செய்தனர். கோவில் பூசாரிகள் சசிதர், கோவில் கமிட்டி உறுப்பினர்கள் ஜெகதீஷ் பேசுகையில் இந்துக்கள் ஒவ்வொரு ஆண்டும் (ஆஷாட ) ஆடி மாத சுத்த பௌர்ணமி தினத்தில் குரு பௌர்ணமியை கொண்டாடுகின்றனர். நேற்று கோவில் கமிட்டி சார்பில் குரு பௌர்ணமியை முன்னிட்டு, இக் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. அதிகாலை முதலே திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.