அன்னூர்; அன்னூர் பெரிய அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
அன்னூர், ஓதிமலை சாலையில், பல நூறு ஆண்டுகள் பழமையான பெரியம்மன் கோவிலில் 54வது ஆண்டு பொங்கல் அபிஷேக ஆராதனை விழா இன்று நடந்தது. அதிகாலையில் சின்னம்மன் கோவிலில் அபிஷேக பூஜை நடந்தது. காலை 7:00 மணிக்கு ஆனைமலை கருப்பராயன் கோவிலில் இருந்து, சின்னம்மன் கோவில் வழியாக பெரிய அம்மன் கோவிலுக்கு கரகம் எடுத்து வரும் வைபவம் நடந்தது. காலை 11:00 மணிக்கு பெரியம்மன் கோவிலில் கணபதி ஹோமம், திருக்கல்யாண உற்சவம், அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. 3,000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மதியம் பக்தர்கள் மாவிளக்கு மற்றும் முளைப்பாலிகை எடுத்து வரும் வைபவம் நடந்தது. அன்னூர், திருப்பூர் மற்றும் கோவையிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.