பிள்ளை காளியம்மன் கோவிலில் ஆடி முதல் செவ்வாய் உற்ஸவ விழா; பனை ஓலையில் அன்னதானம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூலை 2024 06:07
கீழக்கரை; கீழக்கரை தட்டான் தோப்பு தெருவில் வேப்பமரத்து பிள்ளை காளியம்மன் கோயில் உள்ளது. 9ம் ஆண்டு ஆடி உற்ஸவ முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு விழா கொண்டாடப்பட்டது. இன்று மூலவர் வேப்பமரத்து பிள்ளை காளி அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், தயிர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக ஆராதனைகள் நடந்தது. நேர்த்திக்கடன் பக்தர்களால் வழங்கப்பட்ட முட்டையிடும் பருவத்தில் உள்ள 100 நாட்டுக்கோழிகளை அம்மனுக்கு முன்புறம் உள்ள பலிபீடத்தில் பலியிடப்பட்டது. பெரிய அண்டாக்களில் சமைக்கப்பட்டு பனையோலை பட்டைகளில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஹிந்து நாடார் உறவின்முறை சங்கத்தினர் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.