கவுமாரியம்மன் கோயில் மறுபூஜை; பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூலை 2024 05:07
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் திருவிழா மறுபூஜையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம் சுமந்து அம்மனை வழிபட்டனர்.
பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனித்திருவிழா ஜூலை 8ல் கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாட்கள் திருவிழா நடந்தது. முக்கிய திருவிழாவான ஜூலை 16 மாவிளக்கு, ஜூலை 17ல் அக்கினிசட்டி எடுத்து ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். இதனை தொடர்ந்து இன்று மறுபூஜையை முன்னிட்டு, தீர்த்ததட்டி மண்டபத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் காவடி, பால்குடம் சுமந்து, ஒரு கி.மீ., தூரம் நடந்து கவுமாரியம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். மலர் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். கோயிலில் ஏராளமான பக்தர்கள் ஆயிரம் கண்பானை எடுத்தும், மா விளக்கு எடுத்தும் அம்மனை வழிபட்டனர். அம்மன் மின் ஒளி அலங்காரத்தில் வீதி உலா சென்றார். ஏற்பாடுகளை தையல் கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் செய்திருந்தனர்.