தேவகோட்டை,; தேவகோட்டை எல்லை காவல் தெய்வமான கோட்டையம்மன் கோவில் ஆடித்திருவிழாவிற்காக நேற்று முன்தினம் மாலை மேடை போடுதல் நிகழ்ச்சி நடந்தது. ஆடி முதல் செவ்வாயை தொடர்ந்து நேற்று காலை காப்புகட்டப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு காட்சியளித்தார். இதனைத் தொடர்ந்து பீடத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் சிறப்பு பூஜைகள் நடந்தன. பகல் 12:00 மணியளவில் அம்மனுக்கு முதல் பொங்கல் வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் ஏராளமானோர் பொங்கல் வைத்து வழிபட்டனர். காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியதை தொடர்ந்து தினமும் காலை மாலை பீடத்திற்கு அபிஷேகம் பூஜை நடைபெறும். 30 ந்தேதி புள்ளி பொங்கல் வைக்கப்படும்.