கோவை; ரேஸ் கோர்ஸ் நிர்மலா கல்லூரி எதிரே அமைந்துள்ள சத்திய நாராயணன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் சத்திய நாராயண சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.