காளஹஸ்தி சிவன் கோயிலில் உண்டியல் காணிக்கை கணக்கிடும் பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூலை 2024 11:07
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக ஆந்திர மாநிலத்தில் இருந்து மட்டுமின்றி அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடக உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமின்றி வெளிநாட்டினரும் சாமி தரிசனம் செய்ய தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகின்றனர். அவ்வாறு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள உண்டியல்களில் செலுத்துவது வழக்கம். பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணத்தை கணக்கிடும் பணியில் கோயில் செயல் அலுவலர் மூர்த்தி முன்னிலையில் தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள் , பணியாளர்கள் காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை ஈடுபட்டனர். கடந்த 30 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரொக்கப் பணமாக ரூபாய் இரண்டு கோடியே 23 லட்சத்து 73 ஆயிரத்து 531, தங்கம் ; 124.400 கிராம், வெள்ளி 677.கிலோ 400 கிராம், வெளிநாட்டு பணம் அமெரிக்கா ;101 மலேசியா ;47 சிங்கப்பூர் ;10 ஸ்ரீலங்கா;11மற்ற நாடுகள்...14 இருந்ததாகவும் இவை கடந்த 35 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை என்று கோயில் செயல் அலுவலர் மூர்த்தி தெரிவித்தார்.