துவங்கிய இரண்டாம் நாளே அந்தரத்தில் நின்ற அய்யர்மலை ரோப் கார்; பக்தர்கள் மீட்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூலை 2024 04:07
குளித்தலை: கரூர் மாவட்டம், அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில், 9.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ரோப் கார் சேவையை, காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இந்த கோவில், 1,178 அடி உயரத்தில் அமைந்துள்ளளது. மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்திடும் வகையில், 6.70 கோடி ரூபாய் செலவில் கம்பிவட ஊர்தி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில், 192 பேர் பயணம் செய்ய முடியும். இந்நிலையில் இன்று ரோப்கார் திடீர் பழுதாகி பாதியில் நின்ற சம்பவம் பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியில் வீசிய பலத்த காற்றின் காரணமாக, மலையடிவாரத்திலிருந்து மலை உச்சிக்கு கிளம்பிய சற்று நேரத்திலேயே ரோப் கார்; பெட்டிகள் தடம் புரண்டதால் சேவை உடனடியாக நிறுத்தப்பட்டது. இதில் உள்ள பக்தர்களை மீட்ட சேவை மைய பணியாளர்கள், ரோப் காரை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ரோப் கார் சேவை துவங்கிய இரண்டாம் நாளே பழுதாகி பாதியில் நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.