பதிவு செய்த நாள்
25
ஜூலை
2024
03:07
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசிக்கின்றனர். மேலும் பக்தர்கள் தங்களது வேண்டுதலை பணம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை காணிக்கையாக உண்டியலில் செலுத்துகின்றனர். அந்த வகையில், கடந்த, 23 நாட்களில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. இதில், 1 கோடியே, 51 லட்சத்து, 90 ஆயிரத்து, 233 ரூபாய், 790 கிராம் தங்கம், 14.650 கிலோ வெள்ளி ஆகியவை இருந்தன. இதுதவிர திருப்பணி உண்டியலில், 8 லட்சத்து, 4 ஆயிரத்து, 604 ரூபாய் வருவாய் வந்துள்ளது. கடந்த முறை உண்டியல் வசூலின் போது, பக்தர்கள் பணம் திருடியதால், ஆண் பக்தர்கள் வேட்டியும், துண்டும் அணிந்து வந்தனர். மேலும், பெண் பக்தர்கள் முழு பரிசோதனைக்கு பின் உண்டியல் பணம் எண்ணும் இடத்திற்கு அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.