குளக்கரை தேவி கருமாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி கூழ் வழங்கல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூலை 2024 12:07
சின்னாளபட்டி; சின்னாளபட்டி கரியன் குளக்கரை தேவி கருமாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் வழங்கிய கம்பு, கேழ்வரகு, அரிசி ஆகியவற்றை கலந்து கூழ் தயாரிக்கப்பட்டது. மண் பானையில் ஊற வைக்கப்பட்ட கூழ், நேற்று காலை கரைக்கப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன், அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. விசேஷ பூஜைகளுக்கு பின், பக்தர்களுக்கு கூழ் பிரசாதம் வழங்கல் நடந்தது.
* மேட்டுப்பட்டி, நடூர், தென்புதூர், கீழக்கோட்டை, ஜனதா காலனி, செக்கடி தெரு, சமயபுரம் மாரியம்மன், வனபத்ரகாளியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.