ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவில் உண்டியல் எண்ணிக்கையில் 22 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் வந்துள்ளது. உண்டியல் எண்ணிக்கை திருப்பூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆனந்த், தக்கார் குமரதுரை ஆகியோர் முன்னிலையில் நடந்தது. நிரந்தர பொது உண்டியல்கள் மூலம் 18 லட்சத்து 28 ஆயிரத்து 85 ரூபாயும், 130 கிராம் தங்கம், 137 கிராம் வெள்ளியும் கிடைத்தன. தட்டு காணிக்கை உண்டியலில் 4 லட்சத்து 23 ஆயிரத்து 186 ரூபாய் கிடைத்து. இரண்டு உண்டியல்கள் மூலம் 22 லட்சத்து 51 ஆயிரத்து 271 ரூபாய் கிடைத்து. உண்டியல் எண்ணும் பணிக்கான ஏற்பாடுகளை மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் அனிதா கண்காணிப்பாளர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.