திட்டக்குடி வைத்தியநாதசுவாமி கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூலை 2024 05:07
திட்டக்குடி; திட்டக்குடி அசனாம்பிகை உடனுறை வைத்தியநாதசுவாமி கோவில் ஆடிப்பூர திருக்கல்யாண திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு நேற்று இரவு 6.30மணிக்கு மேல் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி பூஜைகள் செய்யப்பட்டது. இன்று காலை வைத்தியநாத சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள அசனாம்பிகை அம்மன் சன்னதி முன்பு உள்ள கொடி மரத்தில், காலை 10 மணியளவில் கொடியேற்றப்பட்டு விழா துவங்கியது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். வரும் ஆகஸ்ட்.7ம் தேதி திருக்கல்யாணம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.