ஆடி கிருத்திகை; பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூலை 2024 06:07
கோவை; ராம் நகர் பட்டேல் ரோடு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஆடி மாத கிருத்திகை தினத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் வள்ளி தெய்வானை சமேதராக தண்டாயுதபாணி முருகப்பெருமான் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.