ஆடிப்பெருக்கு வளர்ச்சி தரும் நாள்; குலதெய்வ வழிபாட்டுக்கு சிறந்தநாள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஆக 2024 07:08
பழநி; ஆடி 18 சிறப்பான நாள். ஆடி மாதத்தில் ஆடிப்பெருக்கு ஆடி கார்த்திகை ஆடி அமாவாசை போன்ற சிறப்பான வழிபாடு செய்யக் கூடிய நாட்கள் உள்ளன. ஆடிப்பெருக்கு குலதெய்வ வழிபாட்டுக்கு சிறந்தநாள். மேலும் கன்னிப் பெண்கள் 5 நாட்கள், 7 நாட்கள் விரதமிருந்து முளைபாலிகை இட்டு ஆடிப்பெருக்கு அன்று அருகில் உள்ள நதிக்கரைக்குச் சென்று சப்த கன்னிரை வழங்கி மாவிளக்கு ஏற்றி வழிபடுவது வழக்கம். திருமணமான பெண்கள் தாலிச்சாறடுகளை அம்மனை வழிபட்டு மாற்றிக் கொள்வர். புதிதாய் திருமணமான தம்பதியர் முதல் முதலில் தாலி சரடை மற்றும் சடங்கை இந்த நாளில் கடைப்பிடிப்பர். நதிகளில் சீர் செய்யும் மரபு உள்ளது. ஆடிப்பெருக்கு வழிபடுவதால் நல்ல மழை பெய்து பூமி செழிக்கும். ஆடிப்பெருக்கு நாட்களில் முக்கிய நல்ல நிகழ்வுகளை துவங்குவர். ஆடிப்பெருக்கு அன்று நதிகளுக்குச் சென்று வழி படுவதால் குடும்பங்களுக்கு வாரிசு ஏற்படும். தீர்க்காயுள் உடன் வாழ்வார்.
செல்வசுப்பிரமணியம் குருக்கள். பழநி கோயில் அர்ச்சக ஸ்தானிகர்.பழநி.