குழந்தை வரம் வேண்டி மண் சோறு சாப்பிட்டு பெண்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஆக 2024 11:08
சேத்துப்பட்டு; சேத்துப்பட்டு அருகே, குழந்தை வரம் வேண்டி, பெண்கள் மண் சோறு சாப்பிட்டு வழிபாடு நடத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்த கோட்டுப்பாக்கம் கிராமத்தில், பரதேசி ஆறுமுக சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி அமாவாசை நாளில், குழந்தை வரம் வேண்டி மண் சோறு சாப்பிடும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்படி ஆடி அமாவாசையான நேற்று, 188வது ஆண்டாக இந்நிகழ்வு நடந்தது. நுாற்றுக்கணக்கான பெண்கள் அங்கு நடந்த யாக சாலை பூஜையில் பங்கேற்றனர். பிறகு குழந்தை வரம் வேண்டி, பரதேசி ஆறுமுக சுவாமியை நினைத்து வழிபட்டனர். பின், சேலை முந்தானையில் பிரசாதம் பெற்று, அதை கோவில் அருகே உள்ள குளக்கரையில் வைத்து, மண்டியிட்டு சாப்பிட்டனர். இங்கு ஏற்கனவே இவ்வாறு வழிபட்டு, குழந்தை பாக்கியம் பெற்றவர்களும், நேற்று வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.