திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ஆடிப்பூர விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஆக 2024 11:08
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் ஆடிப்பூர விழாவில் ஆண்டாளுக்கு நூர்தடா அக்காரவடிசில் நெய்வேத்தியம் நடந்தது. திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ஆடிப்பூர பெருவிழாவில் நேற்று காலை 6:00 மணிக்கு மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனம், 7:30 மணி வரை நித்திய பூஜைகள், 8:00 மணிக்கு ஆண்டாள்நாச்சியார் சமேத தேகளீச பெருமாள் தங்க பள்ளத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. மதியம் 12:00 மணிக்கு கண்ணாடி அறையில் சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம், சிறப்பு அலங்காரத்தில் மாலை 3:00 மணிக்கு நூர்தடா அக்காரவடிசில் நெய்வத்தியம் செய்யப்பட்டது. சாற்றுமரை, பிரசாத விநியோகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு ஆண்டாள் நாச்சியார் சமேத தேகளீச பெருமாள் திருக்கல்யாண வைபவம் பெரியாழ்வார் முன்னிலையில் மிகச் சிறப்பாக நடந்தது. தொடர்ந்து இரவு 9:00 மணிக்கு சுவாமி புறப்பாடாகி ஆஸ்தானம் எழுந்தருளினார். ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரியார் உத்தரவின் பேரில், தேவஸ்தான ஏஜென்ட் கோலாகலன் மேற்பார்வையில் விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.