அவிநாசி அங்காள பரமேஸ்வரி அம்மன் புற்றுக்கண் கோவிலில் நாக பஞ்சமி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஆக 2024 10:08
அவிநாசி; அங்காள பரமேஸ்வரி அம்மன் புற்றுக்கண் கோவிலில் 21ம் ஆண்டு நாக பஞ்சமி பெரும் பூஜை விழாவை முன்னிட்டு தீர்த்த குடம் ஊர்வலம் நடைபெற்றது. அவிநாசி அடுத்த தெக்கலூர் அருகே கிட்டாம் பாளையம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் புற்றுக்கண் கோவிலல் 21ம் ஆண்டு நாகபஞ்சமி பெரும் பூஜை விழாவை முன்னிட்டு அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்த குடம் எடுத்து செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று அபிஷேகம், அலங்காரம்,மகா தீபாராதனை நடைபெறுகிறது. கோவில் நிர்வாக குழு மற்றும் ஒரு பொது மக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.