பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆடி லட்சார்ச்சனை நிறைவு வேள்வி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஆக 2024 07:08
பழநி; பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் லட்சார்ச்சனை நிறைவு வேள்வி நடைபெற்றது.
பழநி முருகன் கோயிலின் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் லட்சார்ச்சனை நிகழ்ச்சி நடைபெறும். ஜூலை.17, ஆடி மாதம் முதல் நாளில் பெரியநாயகியம்மன் கோயிலில் சாய்ரட்சை பூஜையில் லட்சார்ச்சனை துவங்கியது. தினமும் சாயரச்சை பூஜையில் நடைபெற்றது. ஜூலை.19., பெரிய நாயகி அம்மனுக்கு முத்தங்கி அலங்காரம், ஜூலை. 26., இல் மீனாட்சி அலங்காரம், ஆக., 2ல் சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது. ஆக., 10 வரை நடைபெற்றது. இன்று (ஆக.11ல்) கோயிலில் 1008 வஸ்திரங்கள், பழங்கள் வேள்விக்கான பொருட்கள் ஆகியவை கேள்வியில் இடப்பட்டு மகா லட்சார்ச்சனை வேள்வி நடைபெற்றது. வேள்வியில் வைக்கப்பட்ட பூர்ண கும்பக்கங்களின் புனித நீரை அம்பாளுக்கு அபிஷேகம் செய்தனர். அதன்பின் சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. சுவாமி புறப்பாடு நடைபெற்றது. ஆக., 16 இல் தங்க கவச அலங்காரம் நடைபெறும். அதன்பின் வெள்ளித்தேரில் சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது.