பாலக்காடு தர்மசாஸ்தா கோவிலில் கஜ பூஜை; யானையூட்டு விழா
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஆக 2024 07:08
பாலக்காடு; ஸ்ரீ தர்மசாஸ்தா கோவிலில் கஜ பூஜையும் யானையூட்டு நிகழ்ச்சியும் வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநில பாலக்காடு மாவட்ட மேற்கு யாக்கரை சாஸ்தா நகரில் உள்ளது ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில். இங்கு ஆடி மாத பூஜையின் ஒரு பகுதியாக நேற்று மாலை 6 மணி அளவில் கஜ பூஜையும் யானைக்கு உணவளிக்கும் நிகழ்வான யானையூட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது. கோவில் புரோகிதர் கணேஷின் தலைமையில் பூஜைகள் நடந்தன. எர்ணாகுளம் பிராமணர் வீட்டில் கோவிந்தன்குட்டி என்ற யானைக்கு பக்தர்கள் மூலிகை அடங்கும் உணவு மற்றும் பழங்கள் வழங்கி வழிபட்டனர். நிகழ்ச்சியை ஓட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தன.