படைவெட்டி மாரியம்மன் கோவிலில் 1008 இளநீர் அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஆக 2024 04:08
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ படைவெட்டி மாரியம்மன் கோவிலில் ஆடி கடை ஞாயிறை முன்னிட்டு பால்குட உற்சவம் , 1008 இளநீர் மற்றும் பாலாபிஷேகம் சுவாமிக்கு சிறப்பாக நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் சேந்தங்குடியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ படைவெட்டி மாரியம்மன் ஆலயமானது அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் ஆடி கடை ஞாயிறை முன்னிட்டு பால்குட உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை ஒட்டி மேள வாத்தியங்கள் முழங்க காவிரி கரையில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக முக்கிய வீதியில் வழியாக சென்றனர். தொடர்ந்து பச்சைக்காளி மற்றும் பவளக்காளி ஆட்டத்துடன் பால்குடம் சென்ற நிலையில் வழிநெடுகிலும் பக்தர்கள் தீபாராதனை எடுத்து வழிபட்டனர். இறுதியில் ஆலயத்தில் பக்தர்கள் கொண்டு வந்த பாலினை கொண்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக சுவாமிக்கு 1008 இளநீரைக் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.