கும்மிடிப்பூண்டி அருகே மாரியம்மன் கோவிலில் தீமிதி திரு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஆக 2024 04:08
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி அருகே காட்டுக்கொள்ளைமேடு கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று இரவு தீமிதி திருவிழா நடந்தது. நுாற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றினர். அதே கிராமத்தை சேர்ந்த மணிகண்டன், 47, என்பவர், அவரது மகன் மோனிஷ், 7, உடன் விரதம் இருந்து தீ மிதிக்க வந்தார். சிறுவன் மோனிஷ் தயக்கம் காட்டிய நிலையில், மகனின் கையை பிடித்துக்கொண்டு மணிகண்டன் தீக்குழியில் இறங்கினார். அப்போது சிறுவன் மோனிஷ் தடுமாறி விழுந்தார். சுற்றி இருந்தவர்கள் ஓடிச்சென்று சிறுவனை மீட்டனர். தீக்காயம் அடைந்த சிறுவன், சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆரம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர் .இச்சம்பவத்தால் திருவிழாவில் பரபரப்பு ஏற்பட்டது.