Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் பவித்ரோற்சவம் ; வரும் ... திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயிலில் குருபூஜை விழா திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிறுமலை சின்னக்கடை நாகம்மாள் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
சிறுமலை சின்னக்கடை நாகம்மாள் கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

13 ஆக
2024
11:08

சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே அஞ்சுகுழிப்பட்டி ஊராட்சி சிறுமலை சின்னக்கடை வெள்ளையம்மாள் சாமி, நாகம்மாள் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


விழாவையொட்டி நேற்று முன்தினம் திருச்செந்தூர், ராமேஸ்வரம், அழகர் கோயில், வைகை, காவிரி உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்த குடங்கள் மற்றும் முளைப்பாரி ஊர்வலமாக கோவில் முன் அமைக்கப்பட்ட யாகசாலைக்கு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து மங்கள இசையுடன் அனுக்ஞை, விக்னேஸ்வர்பூஜை, மஹா கணபதி ஹோமம், வாஸ்துசாந்தி. திக்பந்தனம் மிருச்சங்கிரணம், அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம், பஞ்சமாவர்ணபூஜை, தோரணபூஜை வேதபாராயணம், மூலமந்திரம் ஜெபஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோம பூஜைகள் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை யாகசாலை பூஜைகளை தொடர்ந்து மேளதாளம் முழங்க கடன் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கோயில் கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது கருடர்கள் வானத்தில் வட்டமிட அதை கண்ட பக்தர்கள் பக்தி பரவசத்தில் கோஷமிட்டனர். கும்பாபிஷேகத்தை மேட்டுக்கடை டாக்டர் திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் நடத்தி வைத்தார். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar