பதிவு செய்த நாள்
13
ஆக
2024
03:08
திருத்தணி: திருத்தணி மேட்டுத் தெருவில் உள்ள செங்குந்தர் திருமண மண்டபத்தில், வரும் 17ம் தேதி காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, ஆடிட்டர் அருளிசைமணி மெய்யப்பன் மற்றும் அலுமேலு தம்பதி பயிற்றுவித்து வழி நடத்தும் திருமுருகன் திருப்புகழ் பாராயணக் குழு சார்பில் திருப்புகழ், 108 மணி மாலை, திருத்தணிகை திருப்புகழ் பாராயணம் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 8:55 மணிக்கு வேல் அபிஷேகம் மற்றும் திருப்புகழ் பாராயணம் துவங்கி, மதியம், 1:00 மணிவரை நடக்கிறது. மதியம் 2:00 மணிக்கு திருப்புகழ் பாராயணம் தொடர்ச்சி, வேல் மாறல், வேல் மயில் சேவல் விருத்தம் பாராயணம் நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு மகா தீபாராதனையும், பின் வேல் திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு சென்று, மூலவர், வள்ளி, தெய்வானை, உற்சவர்கள் சண்முகர், முருகர் ஆகிய சன்னிதிகளில் வைத்து சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று முருகப்பெருமானை வழிப்பட வேண்டும் என, திருமுருகன் திருப்புகழ் பாராயணக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.