குன்னுாரில் ஆடிப்பூர விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஆக 2024 02:08
குன்னுார்; குன்னுாரில் ஆடிப்பூர விழாவையொட்டி, கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது. குன்னுார் ரேலி காம்பவுண்ட் பகுதியில் உள்ள ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தில் ஆடிப்பூர பெருவிழா நடந்தது. மன்ற தலைவி பிரபாவதி மோகன் தலைமையில், சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, தந்தி மாரியம்மன் கோவிலில் துவங்கிய கஞ்சி கலய ஊர்வலம், பஸ் ஸ்டாண்ட் வழியாக ரேலி காம்பவுண்ட் ஆதிபராசக்தி மன்றத்தை அடைந்தது. ஊர்வலத்தில் செவ்வாடை பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை மன்ற குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.