திருப்புத்தூர்: விரத காலம் துவங்கியதால்,பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் நேற்று முதல் கூடுதல் நடை திறக்கப்படுகிறது.நேற்று கார்த்திகை துவங்கியதால், பழநி செல்லும் பக்தர்களும்,சபரிமலை செல்லும் பக்தர்களும் பல்வேறு கோயில்களுக்கு சென்று மாலை அணிந்து விரதம் துவக்கியுள்ளனர். நேற்று முதல், பிள்ளையார்பட்டிக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.இதனை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக, கோயில் நடைநேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.வழக்கமாக மதியம் 1 மணி முதல் 4 மணி வரை நடை சாத்தப்பட்டிருக்கும்.தற்போது காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நடை திறக்கப்பட்டிருக்கும். மார்கழி மாதங்களில் அதிகாலையில் திறக்கப்படும். கூடுதல் நடைதிறப்பு தை மாதம் வரை நீடிக்கும் என்று நிர்வாக அறங்காவலர்கள் காரைக்குடி என்.லெட்சுமணன், குருவிக்கொண்டான்பட்டி எஸ்.சிதம்பரம் தெரிவித்தனர்.