பதிவு செய்த நாள்
14
ஆக
2024
02:08
78வது சுதந்திர தின விழா நாளை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அசம்பாவித சம்பவம் நிகழாத வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களான கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திர தாணுமாலையன்சுவாமி கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் சோதனைக்கு பின்னரே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
திருச்செந்தூர்; சுதந்திர தினம் முன்னிட்டு முன்னெச்சரிகை நடவடிக்கையாக, திருச்செந்தூர் கோவில் நுழைவு வாயிலான சண்முக விலாச மண்டபம் முன் பணியில் இருக்கும் போலீசார், மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனைக்கு பிறகே பக்தர்களை அனுமதிக்கின்றனர்.
பழநி: சுதந்திர தினத்தை முன்னிட்டு பழநி, மலைக்கோயில் தங்க கோபுரத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.